e-Residency - நேரடி தமிழ்ச் சொல் தெரியவில்லை. சுருக்கமாக சொல்வதென்றால் உங்களுக்கான டிஜிட்டல் பிரஜாவுரிமை. அதாவது நீங்கள் இலங்கை பிரஜையாக இருக்கின்ற அதே நேரம் உலகிலுள்ள இன்னொரு நாடு online ஊடாக உங்களுக்கு பிரஜாவுரிமையை தருகிறது. அது எப்படி சாத்தியம்? அதன் பயன்தான் என்ன என்பவர்களுக்கு இந்த பதிவு பதில் சொல்லும்.
Block chain தொழிநுட்பத்தில் உருவானது தான் இந்த e-Residency. இதை வழங்குவது estonia எனும் ஐரோப்பிய நாடு. உலகின் தொழிநுட்ப முன்னோடி என இந்த நாட்டை குறிப்பிடலாம். இங்கு அனைத்து அரச சேவைகளையும் இணைய வழியினூடாக அணுக முடியும். இணைய வழி தேர்தல் வாக்கெடுப்பை அறிமுகப்படுத்திய முதல் நாடும் இதுவாகும். இங்குள்ள பாடசாலைகள் யாவும் இணையவழி இயங்குவதுடன் ஆரம்பம் முதலே மாணவர்களுக்கு coding கற்பிக்கப்படுகிறது.
சரி, இந்த e-Residency மூலம் என்ன செய்யலாம்? உலகில் எந்த மூலையில் இருந்தும் location independent ஆன ஒரு business ஐ உங்களால் நடத்த முடியும். எல்லா விதமான தொழிநுட்ப சேவைகளையும் உங்களால் பெற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக இன்னும் இலங்கையில் Paypal சேவையை முழுமையாக அணுக முடியாது. ஆனால் இந்த e-Residency மூலம் உங்களால் அதை மிக இலகுவாக அணுகலாம்.
குறிப்பாக இந்த covid crisis இற்கு பிறகு முழு உலகுமே புதுவகையான வாழ்க்கை முறைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. பெரும்பாலான வணிகங்கள் online இற்கு மாறியிருக்கின்றன. சில வாய்ப்புக்கள் மூடப்பட பல வாய்ப்புக்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்று தான் online business.
online business ஒன்றை மிக வெற்றிகரமாக நடத்த இந்த e-Residency பெரிதும் உதவுகிறது. உங்களுக்கு வழங்கப்படும் e-Residency Kit இனூடாக உலகின் எந்த மூலையில் இருந்தும் உங்கள் வணிகத்தையும் அதற்க்கு தேவையான தொழிநுட்ப சேவைகள் மற்றும் வணிக சேவைகளையும் மிக இலகுவாக அணுக முடியும். இது மட்டுமல்ல இன்னும் பல benefits களும் உள்ளன.
இது பற்றி மேலும் விளக்கமாக அறிந்து கொள்ள e-Residency இணையதளமான e-resident.gov.ee ஐயும் அவர்களின் youtube பக்கத்தினையும் அணுகுங்கள்.
Comments
Post a Comment